adsu

Popular Posts

ஃபேஸ்புக்கில் ஒரே டாலரில் விளம்பரம் செய்வதெப்படி?


பதிவுகள் (post) இடுதல் அவற்றை நண்பர்களோடு பகிர்தல் (share), பின்னூட்டம் (comment) இடுதல், லைக் செய்தல், டேக் (tag) செய்தல் போன்றன அனைத்து முகநூல்வாசிகளுக்கும் மிகவும் பரிச்சயமான செயற்பாடுகள்தான். இவற்றைப் பற்றி யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இவை தவிர சாதாரண முகநூல் பயனர்களுக்கான இன்னும் ஒரு முக்கியமான செயற்பாடு முக நூலில் உள்ளது. முக நூலில் மட்டுமல்லாது அனைத்து சமூக ஊடகங்களிலும் அந்த வசதியிருக்கிறது. அதுதான் பூஸ்டிங் (Boosting)  எனும் விளம்பரப்படுத்தல் வசதி. அதாவது பூஸ்ட் செய்வதன் மூலம் உங்கள் இடுகைகளை உங்கள் நட்பு வட்டாரத்தைத் தாண்டி உலகின் எப்பகுதியில்  உள்ளவர்களையும் சென்றடைய வைக்க முடியும்,

விளம்பரம் / விளம்பரப்படுத்தலைக் குறிக்க ஆங்கிலத்தில் Ad எனும் வார்த்தைதானே பயன் படுத்தப்படுகிறது என நீங்கள் கேட்கலாம். உண்மைதான் இங்கு அதற்குப் பதிலாக (Boost) பூஸ்ட் எனும் வார்த்தை பயன் படுத்தப்படுகிறது. பூஸ்ட் என்பது எண்ணிக்கையை அதிகரித்தல் அல்லது அடைவை அதிகரித்தல் எனும் அர்த்த்தில் இங்கு பயன் படுத்தப்படுகிறது.

இன்னும் சிறிது அலசினால் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்ய வேண்டுமானால் ஒரு பேஸ்புக் பேஜ் (page)  எனும் பக்கத்தை உருவாக்கி அதன் மூலமே விளம்பரப்படுத்த முடியும். உங்கள் வழமையான தனிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து விளம்பரம் செய்ய முடியாது. இங்கு tamiltech.lk என்பது எனது பேஸ்புக் பேஜ்)  ஒரு பேஜிற்கு friend request அனுப்பாமலேயே எவரும் அந்தப் பக்கத்தை பின்தொடரலாம் (follow)  அல்லது like செய்து இணைந்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு பேஸ்புக் பேஜில்  ஒரு இடுகையை (Post) இடும்போது அந்தப் பேஜினை ஆயிரம் பேர் பின் தொடர்ந்தாலும் (followers) ஆயிரம் பேரையும் அந்த இடுகை தானாகவே போய்ச் சேராது அல்லது ரீச்(reach) ஆகாது . ஆயிரம் பேரில் சுமார் 50 பேரளவிலேயே அந்த இடுகை போய்ச் சேரும். (பேஸ்புக் ஆரம்ப காலத்தில் இந்த நிலைமை இருக்கவில்லை. ஒரு போஸ்ட் பதிவு செய்தால் எந்தவொரு நண்பரையும் தவறாமல் போய்ச் சேரும்)

இங்குதான் பேஸ்புக் தனது வணிக யுக்தியைப் பயன் படுத்துகிறது. அதாவது உங்கள் பக்கத்தை பின் தொடர்பவர்கள் அனைவருக்கும் காண்பிக்க வேண்டுமானால் அந்த இடுகையை பூஸ்ட் செய்யுமாறு தூண்டுகிறது. நல்ல தமிழில் சொல்வதானால் அந்த இடுகையை பணம் செலுத்தி பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் சொல்கிறது.  அந்த பூஸ்ட்தான் அவர்களது விளம்பர வருமானம்.

பேஸ்புக் போஸ்ட் மட்டுமன்றி, பேஸ்புக் பேஜ், இணைய தளம் என எதனையும் பேஸ்புக் பக்கத்தில் பூஸ்ட் செய்ய முடியும்.  பேஸ்புக் விளம்பரம் என்பது சாதாரண முகநூல் வாசிகளுக்குப் பயன்படாத ஒரு விடயமானாலும் வணிக நோக்கில் தமது பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்துவதற்கு மிகவும் எளிதான அதேவேளை செலவு குறைந்த ஒரு வழி முறையாக பேஸ்புக் Facebook ads விளம்பர சேவை கருதப்படுகிறது

ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்ய எந்தவொரு விளம்பர நிறுவனத்தையோ முகவரையோ நாட வேண்டியதில்லை. நீங்களாகவே விளம்பரம் செய்து கொள்ளக் கூடிய எளிமையான இடை முகப்பை (interface) ஃபேஸ்புக் தருகிறது.

கடந்த ஓரிரு வருடங்களில் ஃபேஸ்புக் விளம்பரங்களைப் பயன் படுத்துவோரின் என்ணிக்கையும் அதிகளவில் உயர்ந்திருப்பதைக் காண முடிகிறது.  நீங்கள் முக நூலில் சஞ்சரிக்கும் போது திடீரென் உங்களுக்குச் சமபந்தமேயில்லாத  ஒரு இடுகை (அனேகமாக அது படமாக அல்லது காணொலியாக இருக்கலாம்)  மங்களான  எழுத்துக்களில்  Sponsored post எனும்   உப  தலைப்போடு வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவைதான் ஃபேஸ்புக் விளம்பரங்கள். அதாவது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்.

இது ஏற்கனவே நீங்கள் அறிந்த விடயம்தான். ஆனாலும் அதனைச் சொல்லாவிட்டால் இந்தக் கட்டுரை முழுமை பெறாது.

இவ்வாறான விளம்பரங்கள் மூலம் பெறும் வருமானம்தான்  ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கை, முதல் நிலை உலக பணக்கார்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது.

mark - How to "Boost Post" on Facebook?
Mark Zuckerberg

அதாவது பேஸ்புக் பயன்பாட்டை உங்களுக்கு இலவசமாக வழங்கி உங்களை அதனுள் ஈர்த்து உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உங்களிடமிருந்தே பெற்று தனக்கு வரும் விளம்பரங்களை உங்களுக்கும் உங்களைப் போன்ற பிற பேஸ்புக் பயனர்களுக்குக் காண்பித்து தினமும் கோடி கோடியாய் ”காசு பார்க்கிறது” பேஸ்புக்.

ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்வதெப்படி என இனிப் பார்ப்போம்?

1 1 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

முதலில் Facebook page  ற்கு நுழைய வேண்டும். விளம்பரப் படுத்த வேண்டிய இடுகையைத் தெரிவு செய்யுங்கள்.  அந்த  இடுகையின் கீழ் இருக்கும்  பூஸ்ட் போஸ்ட் (Boost post)   பட்டனைக் களிக் செய்யுங்கள் 

2 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

பார்வையாளர்களை இலக்கு வை!

பூஸ்ட் போஸ்ட் பட்டனைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் ஒரு மெனுவுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு உங்கள் இலக்கு விருப்பங்களைத் தேர்வுசெய்யத் ஆரம்பிக்கலாம்

3 1 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial
4 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial
5 1024x625 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

இயல்பு நிலையில் உங்கள் பக்கத்தை தற்போது விரும்பும் நபர்களை அல்லது தற்போதைய அனைத்து பின்தொடர்பவர்களையும் அவர்களது நண்பர்களையும் மட்டுமே சேர்க்க நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும் வயது, இருப்பிடம், பாலினம் அல்லது ஆர்வங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட புள்ளிவிவரத்தை குறிவைத்து விளம்பரப்படுத்துவதே நல்லது.

அடுத்து புதிய பார்வையாளர்கள்  பட்டியலை உருவாக்க Create New Audience  என்பதைக் க்ளிக் செய்யவும்.

6 1 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

நீங்கள் விரும்பிய விதத்தில் உங்கள் இலக்குப் பார்வையாளர்களை வரையறுக்க  முடியும்.. அதாவது நீங்கள்  விரும்பிய  இடங்களை  (locations)  சேர்க்கலாம் அல்லது அகற்றலாம், இடங்கள் எனும் போது நாடு, நகரம், கிராமம், வீதி, முகவரி  என அனைத்தையும்  இலக்காக சேர்க்கலாம்.   

7 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

உங்கள் பார்வையாளர்கள் ஆண்களா பெண்களா அல்லது இருபாலாருமா என்பதையும் இலக்காக்க கொள்ளாம்.

பார்வையாளர் வயது வரம்பையும் நிர்ணயிக்க முடியும். மேலும் குறிப்பிட்ட விடயங்களில்  ஆர்வமுள்ளவர்களையும் சேர்க்கலாம்.

இவ்வாறு பார்வையாளர்களை (narrowing) ஒடுக்குவதன் மூலம் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு மட்டுமே விளம்பரம் காண்பிக்கப்பட முடியும்

8 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial
14 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

அடுத்து பட்ஜட்டைத் (budget) தீர்மானி

உங்கள் பார்வையாளர் இலக்கினை வரையறுத்தவுடன், விளம்பரத்திற்கான பட்ஜெட்டை தீர்மானிக்க வேண்டும். பார்வையாளர்கள் இலக்கை  ஏற்கனவே அமைத்திருந்தால், உங்கள்  பட்ஜெட்டின்படி  உங்கள் இடுகை எவ்வளவு  பார்வையாளர்களை அடைய முடியும் என்பதற்கான அண்ணளவான  அடைவு  மட்டம்  உங்களுக்குக் காண்பிக்கப்படும்.

15 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

ஒரு விளம்பரத்திற்கான  குறைந்தபட்சம் கட்டணம் ஒரு நாளைக்கு $1; ஒரு டாலர்  ஆகும்.  பட்ஜட்டின் அளவை அதிகரிப்பதன் மூலமும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவதோடு பார்வையாளர்களின் எண்ணிகையையும் அதிகரிக்க முடியும்

11 1024x619 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

Set the boost duration

அடுத்து, உங்கள் விளம்பரம்  எப்போது இயங்க வேண்டும்   எத்தனை நாட்கள் இயங்க (duration) வேண்டும்  என்பதைத்  தெரிவு செய்யுங்கள்… ஒரு குறிப்பிட்ட தேதி வரை விளம்பரம் இயங்குமாரு நீங்கள் தேர்வு செய்யலாம்.

12 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

Preview the post முன்னோட்டம் பார்

அடுத்து விளம்பரத்தை பதிப்பிக்க முன்னர் அதன் முன்னோட்டம் (Preview) பாருங்கள். பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.  இணைப்புகள் முறையாக இயங்குகிறதா எனப் பாருங்கள்.  மேலும் அனைத்து காட்சி கூறுகளும் (visual elements) அழகாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள் .

10 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

Payment Option – கட்டண  முறை

அடுத்து பொருத்தமான கட்டண  முறையைத் (payment option) தேர்ந்தெடுங்கள்.பல்வேறு  கட்டண முறைகளை  பேஸ்புக் ஆதரிக்கிறது.  உங்கள் Paypal, கணக்கு மற்றும் Credit card / debit card மூலமும் கட்டணம் செலுத்த முடியும். (கட்டண விவரங்களை  முன் கூட்டியே  ஃபேஸ்புக் பக்கத்தில் சேமித்திராவிட்டால்  உங்கள் விவரங்களை வழங்க வேண்டும்,

9 1 - How to "Boost Post" on Facebook?
facebook ads tutorial

Boost

இறுதியாக பூஸ்ட்  பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.   பூஸ்ட் பட்டனில் க்ளிக் செய்தவுடனேயே விளம்பரம் காண்பிக்கப்படமாட்டாது.  உங்கள் விளம்பரம்  பேஸ்புக் விளம்பர  பிரிவினரால் மதிப்பாய்வு செய்யப்படும். இது மனித தலையீடுடனான மதிப்பாய்வாகவும் (manual review) மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் (AI–Artificial intelligence)  சார்ந்ததாகவும் இருக்கலாம். எனினும் மதிப்பாய்வு  செய்தன் பின்னரே விளம்பரங்கள் பார்வையாளர்களுக்குக் காண்பிக்கப்படும்  .  இந்த செயற்பாட்டிற்கு  சிறிது நேர தாமதம் ஏற்படலாம்.

விளம்பரம் வெளியிடப்பட்ட பின்னர்  அது  எவ்வாறு செயற்படுகிரது என்பதை Ads Manager பகுதிக்குச் சென்று பார்க்கலாம்.  நீங்கள் விரும்பினால்  உங்கள் விளம்பரத்தை தொடர்ந்து  காண்பிக்காமல்  இழுத்துப் பிடித்து இடையில் நிறுத்தவும் முடியும். . மேலும் எதிர் பார்த்த அடைவு கிடைக்காத போது இடை நடுவே பார்வையாளர் இலக்கை மாற்றும வசதியுமுள்ளது.  -அனூப்-

No comments