வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவும் Fiverr எனும் ஆன்லைன் சந்தை

எந்த நிறுவனத்திலும் முழு நேரபணியாளராக இணைந்து சேவையாற்றாத ஃப்ரீலான்ஸர்ஸ் (freelancers) எனப்படும்
தனிநபர்களே உலக அளவில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் சேவைகளை வழங்க ஃபைவரை அதிகமாகப்
பயன்படுத்துகிறார்கள்.
வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில்
சம்பாதிக்கலாம் என எராளமான விளம்பரங்களை நீங்கள் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் அவ்வப் போதுபார்த்திருக்கலாம். ஆனால் அவற்றுள் அதிகமானவை போலியானவையாகவும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவையாகவுமே
இருக்கும். அவ்வாறான விளம்பரங்களுக்குமத்தியில்
ஃபைவர்தளம் எந்தவிதமான போலித்தனமும்
இல்லாமல் திறமையுள்ள எவரும்
மாதந்தோறும் இலட்சங்களில் சம்பாதிக்கக் கூடியவாறு உண்மையான ஆன்லைன் தொழில் வாய்ப்பை கடந்த பத்து வருடங்களாக வழங்கிவருகிறது.

ஆனால் அவற்றிற்கு மாறாக ஃபைவர்தளம் ஓரிரு நாட்களில் பூர்த்திசெய்யக் கூடிய தனிநபர் சார்ந்த மைக்ரோ ஜொப்ஸ் (micro jobs) எனப்படும் மிகச்சிறிய வேலைகளை சந்தைப்படுத்துகின்றன.
சிலநேரம் அவ்வேலைகள் உங்கள்
திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப ஓரிரு மணித்தியாலங்களிலோ அல்லது ஓரிருநிமிடங்களிலோ
கூட செய்துமுடிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். உங்களுக்கு வழங்கப்பட்டவேலையை ஒரே நிமிடத்தில் செய்துமுடித்தாலும் அந்தவேலைக்குரிய கூலியாக ஐந்துடாலர் உறுதிஎன்பது ஓர்
ஆச்சரியமானஉண்மை.

ஃபைவரில் கிரேஃபிக்
வடிவமைப்பு (Graphic
Designing),லோகோவடிவமைப்பு(logo designing)
இணையதளவடிவமைப்பு (web
designing),
ப்ளோக்
உள்ளடக்கம் எழுதுதல் (blog
content writing) வீடியோ படங்களுக்குக்
குரல் கொடுத்தல் (voice over) டீ-ஷர்ட் வடிவமைப்பு, சமூகவலைத்தளங்கள் மூலமான சந்தைப்படுத்தல (Social
Media Marketing);,வீடியோஎடிட்டிங்,மெய்நிகர்உதவியாளர்பணி
(Virtual Assistant),கணிணி செய்நிரலாக்கம் (Programming); அண்ட்ராயிட் செயலிஉருவாக்கம் மற்றும் தரவுஉள்ளீடு (data entry) போன்றன மிகவும்
பிரபலமானவையும் அதிகதேவையும் உள்ள
டிஜிட்டல் சேவைகளாகக் கருதப்படுகின்றன.
மேலேகுறிப்பிடப்பட்டவை தவிர மொழிபெயர;ப்பு, கட்டுரைஎழுதுதல், கற்பித்தல் இசெயற்திட்டஉருவாக்கம், வணிகம், ஆலோசனை என இன்னும் ஏராளமானஆன்லைன் சேவைகள் ஃபைவர்தளத்தில்
பட்டியலிடப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
”கிக்ஸ்” எனப்படும்
சேவைகளை வழங்கப் பதிவுசெய்தபயனர; அல்லது ஃப்ரீலான்ஸராகப் பணியாற்றும் நபர;(seller) விற்பனையாளர் என அழைக்கப்படுகிறார்.
அதேபோன்று ”கிக்ஸ்” களை வாங்க அல்லது சேவைகளைப் பெறுவதற்காக பதிவுசெய்யப்பட்ட பயனரை அல்லது ஃப்ரீலான்ஸரைப் பணியமர்த்தும் நபர் (buyer) வாடிக்கையாளர் அல்லது சேவைபெறுநர் எனவும்
அழைக்கப்படுகிறார்.
ஃபைவரில் சேவைகளைப் பெறவோ அல்லது வழங்கவோ எதுவாக இருந்தாலும் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இக்கணக்கை இலவசமாகவே ஃபைவரில் உருவாக்கிக்
கொள்ளமுடியும்.
ஃபைவரில் சேவை பெறுநராக கணக்கொன்றை உருவாக்கி சேவைகளைப்
பெறுவதென்பது இலகுவானவிடயம்தான். ஆனால் சேவைவழங்குநராகப் பதிவுசெய்து உங்களால் வழங்கக் கூடியசேவைகளை ”கிக்” உருவாக்கி அதற்கு வாடிக்கையாளர்களைப்
பெறுவது என்பது
ஃபைவருக்குப் புதியவர்களுக்குசற்று சிரமமான காரியம்தான்.

No comments